பொதுவாக மெட்ரோ நிலையங்களுக்குள் பிச்சை கேட்பது தடை செய்யப்பட்டிருக்கிறது, மேலும் அழுக்கான உடையுடன் நுழைவதற்கும் அனுமதி இல்லை. ஆனால், அந்த நபர் சுத்தமான, நவீனமான (டிப்-டாப்) உடையில் பயணி போல நடித்து, டிக்கெட் வாங்கி ரெயிலில் ஏறிய பிறகு தான் பயணிகளிடம் பிச்சை கேட்டுள்ளார்.
அவர் “நான் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி; எனக்கு உதவுங்கள்” என்று ஒரு சிறு துண்டு சீட்டில் எழுதித் தந்து, அதன்மூலம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தச் செயலை கவனித்த மெட்ரோ அதிகாரிகள் உடனே அவரை பிடித்து ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். இதேசமயம் ஒரு பயணி அந்த சம்பவத்தை மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி, சமூக வலைதளங்களில் பலரும் இதைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெங்களூர் மெட்ரோவில் நடந்துள்ளது.
