தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று நிலையில் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் விசிக கட்சி போன்றவைகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தது.
முதல்முறையாக கட்சி ஆரம்பித்து இரண்டே வருடத்தில் ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஏர்போர்ட்டுக்கு வந்த ரஜினிகாந்தின் முதலமைச்சர் விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து பதில் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Tamil Superstar Rajinikanth smiles and leaves when asked about Joseph Vijay becoming CM. pic.twitter.com/MYZJi92VTG
— News Arena India (@NewsArenaIndia) May 12, 2026
