தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை வேரோடு அறுக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி ‘ஆக்‌ஷனில்’ இறங்கியுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க, முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் வகையில் 65 சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி ஒருபுறமிருக்க, போதை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 50 டாஸ்மாக் மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் தலா 10 கடைகள் வீதம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன.

“இனி தமிழ்நாட்டில் போதைப்பொருள் என்ற பேச்சிற்கே இடமில்லை” என்கிற வகையில் முதலமைச்சர் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவுகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.