தமிழகச் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து சபாநாயகரிடம் கடிதம் வழங்கிய நிலையில், இன்று ஒரு முக்கிய நகர்வாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் புதிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 24 எம்.எல்.ஏ-க்கள் தற்காலிக சபாநாயகரிடம் தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது பலத்தை நிரூபிக்க ஈபிஎஸ் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தன்னிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை மற்றும் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தான் நீடிப்பது குறித்த சட்டப்பூர்வமான அம்சங்களை அவர் சபாநாயகரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.  ஈபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் விசிட் கோட்டை வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.