தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் விநோதமான நேர்த்திக்கடன் ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், கலாவதி என்ற தீவிர பெண் தொண்டர் ஒருவர், விஜய் முதல்வரானதற்காக தனது கன்னத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

அமராவதி ஆற்றிலிருந்து அலகு குத்திக்கொண்ட அந்தப் பெண்மணி, கையில் முதல்வர் விஜய்யின் புகைப்பட சட்டத்தை (Photo Frame) மிகவும் பக்திப்பூர்வமாக ஏந்தியபடியே, அங்கிருந்து கோவில் நோக்கி வந்த ஊர்வலத்தில் நடந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த விநோத நேர்த்திக்கடன் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.