எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் சென்ற போது திடீரென 50க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வாகனத்தை மறித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் ஒட்டிய  தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த போஸ்டரில் முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை.? பழனிச்சாமியே தேவர் மண்ணில் கால் வைக்காதே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவில்பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் அப்போதுதான் வெற்றி பெற முடியும் எனவும் கூறினார்.

இதனைப் பத்து நாட்களுக்குள் எடப்பாடி பழனிச்சாமி செய்யாவிடில் அந்த வேலைகளை நானே செய்வேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இன்று தேனி மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.