பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை; வருவதற்கும் இல்லை” என தெளிவாகக் கூறினார்.
மேலும், “நான் பாஜகவில் சேர்ந்ததற்குப் பிறகு என் மகன் பொறுப்பிற்கு வரவில்லை . அதற்கு முந்தைய கால கட்டத்தில் அவர் மாநில இளைஞரணியில் துணைத்தலைவர் பதவியில் இருந்தார். அதுவே அவருடைய கடைசி பொறுப்பு” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, “பாஜக ஒரு ஒழுங்கமைந்த கட்சி. இது குடும்ப அரசியலை ஏற்காத, தொண்டர்களின் கட்சி. ஒருவரின் குடும்பத்தைச் சார்ந்திருப்பதால் பொறுப்பு கிடைக்கும் சூழ்நிலை பாஜகவில் இல்லை. திறமை, உழைப்பு மற்றும் தொண்டர்களின் நிலைப்பாடு அடிப்படையில் தான் இங்கு உயர்வு ஏற்படுகிறது. எனவே பாஜகவில் வாரிசு அரசியல் தற்போது இல்லை, எதிர்காலத்திலும் இருக்க வாய்ப்பில்லை” என அவர் வலியுறுத்தினார்.
