மீனம் ராசி அன்பர்களே,

இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் செயல்படுவார்கள். அதை பொருட்படுத்த வேண்டாம். அக்கம் பக்கத்தில் அன்பு பாராட்டுவீர்கள். எடுத்த முயற்சி கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும். மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். நல்ல செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். சுமாரான அளவில் பண வரவுகள் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கண்டிப்பாக கிடைக்கும். வீன் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் ஆராய்ந்து சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றுவீர்கள். நல்ல எண்ணங்கள் வெற்றியை கொடுக்கும்.

இன்று பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். மாணவர்கள் இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். படிப்பில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்