குஜராத்தின் பிலிமோரா பகுதியில் உள்ள பிரபல சோமநாத் கோயில் திருவிழாவில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஒரு திகிலூட்டும் விபத்தில், உயரத்தில் செல்லும் சுழற்சி ரைடு நடுவில் திடீரென உடைந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரைடில் இருந்த 10 முதல் 12 பேர் வரை பயணிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ரைடு இயக்கிய நபருக்கு தலையிலும் இடுப்பிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், மேல்  சிகிச்சைக்காக சூரத்துக்கு மாற்றப்பட்டார்.

“>

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு, கோயில்த் திருவிழா வளாகத்தில் உள்ள அனைத்து பெரிய ரைடுகளும் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சிகரமான விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

“>

 

அந்த வீடியோவில், ரைடு வானில் சுழன்று கொண்டு இருந்தபோது திடீரென கீழே விழுந்து பயணிகளை தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி, பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், திருவிழாக்களில் பாதுகாப்பு மேம்பாட்டு அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.