தங்கம் விலை இன்று (ஜனவரி 5, 2026) விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து இல்லத்தரசிகளையும், நடுத்தர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என ஒரே நாளில் இருமுறை விலை அதிகரிப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் மீண்டும் ₹640 அதிகரித்து பெரும் ‘ஷாக்’ கொடுத்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ₹1,280 உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் (சென்னை):
22 கேரட் தங்கம் (1 கிராம்): ₹12,760
22 கேரட் தங்கம் (1 சவரன்): ₹1,02,080
சர்வதேச அரசியல் சூழல்களால் தங்கம் விலை மளமளவென உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. 2026-ன் தொடக்கத்திலேயே தங்கம் விலை ₹1 லட்சத்தைத் தாண்டியிருப்பது நகை வாங்குவோரைத் திகைக்க வைத்துள்ளது.
