சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்த நிலையில் தற்போது 640 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாதோ என்ற கவலையில் உள்ளனர்.
