ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதன்படி அதிமுக பேரூர் செயலாளர் பழனிச்சாமி ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ராஜ் தலைமையில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சரும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளருமான கே சி கருப்பண்ணன் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
இதேபோன்று ராமநாதபுரம் திருவாடனை பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிற கட்சிகளில் இருப்பவர்கள் மற்ற கட்சிகளில் இணைந்து வருவது சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
