சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் ஆட்சி தலைவராகவும், ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ துணை ராணுவத்தின் தலைவராகவும் செயல் பட்டுவருகிறார்கள்.
அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்தில் இணைக்க முயற்சித்ததையடுத்து, இரு தரப்புக்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி கடும் மோதல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை மோதல் நீடித்து வருவதால், பொதுமக்கள் பலத்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சூடானின் வடக்கு டொர்ப் மாகாணம், எல் பெஷர் பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில், இன்று (செப்.19) காலை துணை ராணுவப்படையினர் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. பொதுமக்கள் உயிரிழப்பை காரணமாக கொண்டு, மோதல் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
