இந்திய இராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் இயங்கி வந்த லஷ்கர் இ தய்பா (LeT) அமைப்பின் முக்கிய பயிற்சி முகாமுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முரித்கே பகுதியில் செயல்பட்டு வந்த முக்கிய பயிற்சி முகாமும் அடங்கும். இதனால், LeT அமைப்பின் தளபதியாக கருதப்படும் காசிம் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், “இந்தியா நாசம் செய்துவிட்டது… எங்கள் தலைமையக முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது” எனக் கதறியுள்ளார். மேலும், அந்த முகாமை தற்போது முன்பு இருப்பதைவிடவும் பெரிய அளவில் மீண்டும் அமைக்க முயற்சித்து வருகிறோம் என்றும் அவர் கூறுகிறார்.
🚨 🇵🇰👺 After Jaish commander ilyas kashmiri now Lashkar-e-Taiba Commander Qaasim has torn apart Pakistan’s lies on Muridke terror camps.
👉 Standing in front of the demolished Markaz E Taiba camp, which destroyed in #OperationSindoor, he admits that many terrorists… pic.twitter.com/S80p9wLSFy
— OsintTV 📺 (@OsintTV) September 19, 2025
“>
இந்த வீடியோவில் அவரது வாக்குமூலம் தீவிரவாத அமைப்புகளின் தற்போதைய நிலை குறித்து முக்கிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவம் முற்றிலும் அழித்ததாக கூறப்படும் 9 தீவிரவாத முகாம்கள் குறித்து பல்வேறு தரப்புகளில் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
🇵🇰 𝐑𝐄𝐏𝐎𝐑𝐓 | LeT deputy chief and Pehelgam attack mastermind Saifullah Kasuri has issued a another threat from Pakistan, vowing ‘revenge’ against India.
Likely a per-recorded video from a safe location. He won’t survive for long if he keep talking. https://t.co/QYp9V5rDJ7 pic.twitter.com/bCrCsslUvj
— Conflict Monitor (@ConflictMoniter) September 17, 2025
“>
இது இந்திய பாதுகாப்பு படைகளின் தாக்குத்திறனை பிரதிபலிப்பதோடு, எதிரிகளின் முக்கிய கட்டமைப்புகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
