இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தை காப்பகத்தில் உதவி மேலாளராக பணியாற்றிய லிண்டி லியா (44 வயது), அங்கிருந்த 13 வயது சிறுவனுடன் நெருக்கமாக பழகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சூழலில், சிறுவனுக்கு போதைப்பொருள் வழங்கி, பாலியல் தொல்லை கொடுத்ததுடன், காப்பகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று உல்லாசமாக பழகியதும் தெரியவந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் லிண்டி லியாவிடம் விசாரணை நடத்தினர். அவரின் கைபேசியை ஆய்வு செய்தபோது, சிறுவனுடன் கையோடு இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் நீதிமன்றம் அவரது செயல்களை பலத்த கண்டனத்துடன் , 2 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.