இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் டொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு முறை உணவு வழங்கும் போதும் பயனாளர்களிடம் பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்கின்றன. தற்போது அந்த கட்டணம் ஆறு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 20% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் zomato நிறுவனம் பயன்பாட்டு கட்டணத்தை ஐந்து ரூபாய் உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தற்போது டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உயர்த்தப்பட்ட பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் நகரங்களிலும் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.