உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவர் தச்சு வேலை செய்து வரும் நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிச்சா சோனி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தான் வேலை செய்து கிடைத்த கொஞ்சம் பணத்தில் தனது மனைவியை ரிச்சாவை நீரஜ் படிக்க வைத்துள்ளார்.
அவளுடைய பயிற்சிக்கான கட்டணத்தையும் செலுத்தி படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரிக்ஷாபுக்கு அரசு வேலை கிடைத்ததால் கணவனை பிரிந்து சென்றது மட்டுமல்லாமல் அவருடன் எடுத்த திருமண புகைப்படங்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீரஜ் போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
