மூத்த நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் கடந்த 13ஆம் தேதி நீண்ட கால உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். தற்போது மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடிகர் ரவி தேஜாவின் தந்தை பூபதி ராஜு ராஜகோபால் ராஜு வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு 90 வயது ஆகிறது. ஹைதராபாத்தில் உள்ள ரவி தேஜாவின் இல்லத்தில் அவரது தந்தையின் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இறப்பிற்கு பிரபலங்கள் மற்றும் நலம் விரும்பிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
