குஜராத் மாநிலத்தை சேர்ந்த சமத் அப்துல் ரெஹ்மான் ஷா என்ற நபர் மீது ஒரு வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி அந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது அப்துல் ரகுமான் அந்த வழக்கில் வீடியோ கால் மூலம் 74 நிமிடங்கள் கலந்து கொண்டார். அப்போது அவர் கழிவறை இருக்கையில் அமர்ந்து ஹெட்செட்டை அணிந்து கொண்டு விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த நிலையில் வீடியோ கால் மூலமாக வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த நபர் தன்னுடைய போனை தரையில் வைத்து விட்டு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்வதே வீடியோ காலில் பதிவாகியது. அந்த நேரத்தில் எதிர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்ற அறையில் தன்னுடைய ஆதாரங்களை முன்வைத்து வாதாடி கொண்டிருந்தார்.

அப்துல் ரெஹ்மானின் இந்த செயல் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக இருந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் சோசியல் மீடியாவில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஒரு நபர் இதுபோன்ற செல்களில் ஈடுபடுவது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே குஜராத் உயர் நீதிமன்றம் அவர்  மீது அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்கியது.

தன் மீது செலுத்தப்பட்ட குற்றத்தினால் தவறை உணர்ந்த அப்துல் மன்னிப்பு கேட்பதற்கு தவறாக தயாராக இருந்த போதிலும் நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டது. மேலும் சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோ நீதிமன்றத்தின் நற்பெயரை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளதால் அந்த வீடியோவை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.