கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்றம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தான் முனி மல்லப்பா. கூலி தொழிலாளியான இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி இரவு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நாயை முனி மல்லப்பா அடிக்க முற்பட்டார்‌. இதனால் கோபமடைந்த அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து முனி மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‌. எனினும் சிகிச்சை பலனின்றி முனி மல்லப்பா உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தெரு நாய் கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.