தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் என்ற புகழ்பெற்ற கோயில் இருக்கிறது. இங்கு வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து இருக்கின்றனர். இதனால் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த கோவிலில் மங்களம் என்ற ஒரு யானை இருக்கிறது.
இந்த யானைக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளியில் செய்யப்பட்ட கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார். அதன்பின் கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு மங்களத்திற்கு வெள்ளி கொலுசுகளை அணிவித்தனர். இவ்வாறு காலில் வெள்ளி கொலுசு அணிந்திருக்கும் யானையை பெரும்பாலான பக்தர்கள் பார்த்து ரசித்துச் சென்றனர்.
