மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் (MNC), கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணிபுரியும் இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் அதிர வைத்துள்ளது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் தேவையிலுள்ள 18 முதல் 25 வயதுடைய இளம்பெண்களைக் குறிவைத்து இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளன.

இதுவரை 6 திருமணமாகாத பெண்கள், 2 திருமணமான பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 9 பேர் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, மானபங்கம் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மீட்டிங்கின் போது பெண்களைத் தவறான இடங்களைப் பார்ப்பது, ஆபாசமாகச் சிரிப்பது என அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், சில பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டித் தொடர்ந்து சீரழித்ததும் அம்பலமாகியுள்ளது.