தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான திமுக இப்போதே தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.
இந்த முறை எப்படியாவது தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 175 தொகுதிகளில் திமுக நேரடியாகவோ அல்லது அதன் உதயசூரியன் சின்னத்திலோ வேட்பாளர்களைக் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகத் தனது கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, சில சிறிய கூட்டணிக் கட்சிகள் இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடச் சம்மதித்துள்ளதால், உதயசூரியன் சின்னம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 175 இடங்களில் மின்னப்போகிறது. ஸ்டாலினின் இந்த “மிஷன் 175” அறிவிப்பால் திமுக தொண்டர்கள் செம குஷியில் உள்ளனர்.
