திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் சிலர், வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கில் பொதுமக்களை நேரில் சந்தித்துப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பெண் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், அந்தப் பெண் திமுகவினரிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.

​”எங்க ஏரியாவிற்கு தண்ணீர் வருவதில்லை, குப்பை எடுக்க ஆட்கள் வருவதில்லை, சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. இதையெல்லாம் கவனிக்காமல், கரண்ட் பில் மற்றும் வீட்டு வரியை மட்டும் உயர்த்துகிறீர்கள். இதற்குப் பிறகு எதற்காக ஓட்டு கேட்க வருகிறீர்கள்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் அவர்களைத் துளைத்தெடுத்தார். பொதுமக்களின் இந்த ஆவேசமான எதிர்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.