மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று மனதிற்கு இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். காரியங்கள் கைகூடும். மாற்றுக் கருத்துடையவர்கள் மனம் மாறுவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். உடன்பிறப்புகள் வகையில் உதவிகள் கிடைக்கக்கூடும். மற்றவர்களின் குணம் அறிந்து நடந்து கொள்வீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது.

தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். கஷ்டங்கள் நீங்கும். பொருளாதாரம் மேம்படும். பண வரவு சீராக இருக்கும். திருமணம் முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையால் பணவரவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பெண்கள் இன்று பிள்ளைகளால் சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும் சரி செய்து விட முடியும். திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும்.

எதையும் யோசித்து செய்வது நல்லது. இன்று மாணவர்கள் நெருக்கடிகளை தாண்டி கல்வியில் சாதிக்க வேண்டியது இருக்கும். கடைகளை உடைத்து எறிந்து ஏற்றம் பெறுவீர்கள். உயர்கல்வியில் ஜெயிக்க முடியும். முயற்சித்தால் பிடித்த கல்வியை அடைய முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்