ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று உங்களுக்கு பொன்னான நாளாக அமைந்து விடக்கூடும். சந்தோசம் அதிகரிக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். விருந்தினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வருமானம் இரு மடங்காக இருக்கும். வாழ்க்கை தேவைகளை கண்டிப்பாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்று தேவையற்ற சில செயல்களில் ஈடுபட்டாலும் நல்லது நடக்கும். பணவரவு திருப்தியை கொடுக்கும். உயர்வான எண்ணங்கள் உயர் அதிகாரிகளின் நட்புகள் போன்றவை மகிழ்ச்சியை கொடுக்கும். தினசரி வருமானம் உயரும். இன்று பெண்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் ஜெயிக்க கூடிய சூழல் கண்டிப்பாக இருக்கிறது. உயர் கல்வி திருப்திகரமாக அமையும் வெளிநாடு செல்லும் யோகம் அமையும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு, நான்கு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்