மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் உங்களுக்கு மன மகிழ்ச்சி கூடிவிடும். தொலைபேசி வழி தகவல்கள் தொழிலுக்கு உறுதுணை புரியும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும் சூழல் உள்ளது. மதிப்பு மரியாதை கூடிவிடும். புதிய பொருள் சேர்க்கை கண்டிப்பாக ஏற்படும் மன தடுமாற்றம் ஏற்பட்டாலும் மாறும். வீடு மாற்றம் இட மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். வெளி உலக தொடர்புகள் விரிவடையும். மாமன் மைத்துனர் வழி ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். போட்டிகள் குறைந்துவிடும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும். பண வரவு திருப்தியை கொடுக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலம் கிடைக்கும். பெண்கள் இன்று வாங்க நினைத்த பொருளை வாங்க முடியும். மிகவும் அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெற முடியும். யோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும் முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று, நான்கு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்