மீனம் ராசி அன்பர்களே, 

இன்று புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் உதவிகள் கிடைக்கும். கேட்பவர்களுக்கு உதவிகளை செய்வதற்கு முன்வருவீர்கள். பாகப்பிரிவினை சமூகமாக முடியும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். திடீர் கோபங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிக்க முடியும். எந்த விஷயத்தையும் தள்ளி போடாமல் உடனுக்குடன் முடிப்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும் எந்த செயலையும் சிந்தித்து செய்வது நல்லது. முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.

இன்று மாணவர்கள் எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நல்லது. முன் கோபங்களை தவிர்ப்பது நல்லது. படைப்பில் அக்கறை கொள்ள வேண்டும். கல்விக்காக நேரம் ஒதுக்க வேண்டும். சக மாணவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பிரவுன் நிறம்