கும்பம் ராசி அன்பர்களே,

இன்று அதிரடியான சில திட்டங்களை தீட்டி வெற்றி வாகை சூடும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் வெற்றி இருக்கும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் விரிவடையும். திடீர் கோபங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். நிதானமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.

புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இன்று முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சில பணிகள் விரைந்து நடக்கும். இந்த நாள் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பண்டிகையை அபாரமாக கொண்டாட முடியும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைவரிடமும் கவனமாக பேசுவது நல்லது. இன்று பெண்கள் நன்மைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள். கல்விக்காக நேரம் ஒதுக்குங்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, நான்கு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்