மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று தைரியமாக சில முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். செயலின் திறமை காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். மனம் மகிழ்ச்சியுடன் காணப்படும். கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான சூழல் உள்ளது. மிதுனம் ராசியினர் விருந்து விழாக்களின் பங்கேற்பார்கள். தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக கவனிப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்களின் வருகை இருக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கோபத்தை காட்டாமல் இருப்பது நல்லது. இன்று பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். திட்டமிட்டு எந்த பணியிலும் ஈடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வெற்றி மீது வெற்றி கிடைக்கும். கல்வியில் சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். முயற்சி செய்தால் முன்னேற்றம் ஏற்படும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்