மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று வீண் ஆசைகள் மனதிற்குள் தோன்றும். காரியங்களை நிதானமாக செய்ய பாருங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதமாகலாம். எதையும் சாதிக்கும் திறமை இருக்கிறது. எந்த விஷயத்தையும் புரிந்து கொண்டு செய்வது நல்லது. தீர ஆலோசித்து முடிவெடுங்கள்.

புதிய முயற்சிகளில் தாமதம் கொஞ்சம் ஏற்படும். எதிர்பார்த்த காரிய வெற்றி இருக்கும். புத்திசாலிதனத்தால் எதையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணவரவு தாமதப்பட்டாலும் கண்டிப்பாக சரியாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியைக் கொடுக்கும். பெண்கள் இன்று யோசித்து எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். அவசரப்பட வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சுமாரான அளவில் பண வரவு இருக்கும்.

இன்று மாணவர்கள் முழு பொறுப்புடன் பணிகளில் ஈடுபட பாருங்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்: ஆறு, ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்