கடகம் ராசி அன்பர்களே,

இன்று மாற்றங்கள் ஏற்றங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. பணவரவால் மன மகிழ்ச்சி ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். அழகான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு ஆதரவு கிடைக்கும். இன்று எதையும் கற்றுக் கொள்வதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான செயல்பாடுகள் வெற்றியைக் கொடுக்கும்.

வெளியூர் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பெண்கள் யோசித்து முடிவெடுப்பது நல்லது. சில பணிகள் உங்களுக்கு குறுக்கீடாக இருக்கும். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருங்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கட்டும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்