சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று யோசித்து எந்த முடிவையும் எடுப்பது நல்லது. தன வரவு சீராக இருக்கும் எதிர்ப்புகள் ஓரளவு குறைந்து விடும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. நண்பர்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பேர் புகழ் கிடைக்கும். தொழில்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

அடுத்தவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்க்க வேண்டும். யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். வெளியூர் பயணங்களின் போது கவனமாக இருங்கள். பெண்கள் இன்று நியாயமாக நடந்து கொள்வீர்கள். செய்கின்ற செயலை நிதானமாக செய்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகம் சொல்பவர்கள் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கல்வியில் அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்