சோஷியல் மீடியாவில் தினமும் ஏராளமான விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பிஸ்கட் சாப்பிடும் முறையையே தலைகீழாக மாற்றி நெட்டிசன்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக பிஸ்கட்டை டீ அல்லது பாலில் தொட்டு சாப்பிடுவதே பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால், ஒரு நபர் எந்தவித யோசனையுமின்றி உருவாக்கியுள்ள இந்த “தேசி ஜுகாட்” ஹேக், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தீயாய் பரவி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், ஒரு நபர் பிஸ்கட்டை வித்தியாசமான முறையில் சாப்பிடுவதைக் காண முடிகிறது. அவர் ஒரு பிஸ்கட்டின் மீது சிறிது தண்ணீரை ஊற்றி, அது ஊறிய பிறகு ஒரு ஸ்பூனைப் பயன்படுத்தி அதை அல்வா போல கோரி சாப்பிடுகிறார். டீ, பால் எதுவும் இல்லாத நேரத்தில் அல்லது வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முறையைக் கண்டுபிடித்திருப்பார் போல தெரிகிறது.

மேலும் பிஸ்கட் சாப்பிடுவதற்கு தண்ணீர் மற்றும் ஸ்பூனைப் பயன்படுத்தும் இந்த விசித்திரமான உத்தி, பலருக்கும் புதிய அனுபவமாகவும், அதே சமயம் விசித்திரமாகவும் தோன்றி சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களது கலவையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சிலர் இந்த கிரியேட்டிவ் யோசனையைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தாலும், பெரும்பாலானோர் “யாராவது பிஸ்கட்டை தண்ணீரில் நனைத்து ஸ்பூனால் சாப்பிடுவார்களா?” என்று அதிர்ச்சியையும் கலாய்ப்புகளையும் கமெண்ட் பிரிவில் அள்ளி வீசி வருகின்றனர்.

இந்நிலையில் எது எப்படியோ, மிக எளிமையான பொருள்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விசித்திரமான பிஸ்கட் ஹேக் வீடியோ, தற்போது சோஷியல் மீடியா ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து வைரலாகி வருகிறது.

“>