மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று கொஞ்சம் நீங்கள் எதிலும் யோசித்து ஈடுபட வேண்டும். ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புதிய விஷயங்களில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். குழப்பத்துடன் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும்.

எதையும் யோசித்து செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். சந்திராஷ்டமம் முடியும் வரை பொறுமை காப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள் பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். சமையலின் போது கவனமாக இருங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுங்கள். எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுங்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். காரியங்களை யோசித்து செய்ய வேண்டும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நேரம்