ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று காரியத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் லாபம் கிடைக்க பெறும். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். வெளி உலக தொடர்ப விரிவடையும். இடம் பூமி வாங்க போட்ட திட்டம் வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அமையும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்திடுங்கள்.

விரோதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. இன்று பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். கவலைகள் சரியாகும். வீடு மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் உள்ளது. இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பீர்கள்.

காரியங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்