மேஷம் ராசி அன்பர்களே,

இன்று இறைவன் வழிபாட்டில் ஆர்வம் கொள்ளும் நாளாக இருக்கும். சிந்தனையை ஒருநிலைப்படுத்தினால் வெற்றி கிடைக்கும். கைமாத்தாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பீர்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்கவும் வேண்டாம். மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கும். திட்டங்கள் தீட்டி வெற்றி பெறும் சூழல் உள்ளது.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். மங்களகரமான சுப காரியங்கள் நடைபெற கூடும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள்.

சிந்தித்து எதையும் செய்வது நல்லது. வேகத்தை விட விவேகம் முக்கியம். இன்று மாணவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். காரியங்களில் வெற்றி ஏற்படும். புதுப்புது விஷயங்களை யோசிப்பீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்