தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி,திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
