கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 10) டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, நகரத்தின் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிய ஒரு குடும்பத்தாரின் காரை டெல்லி சிகாமத் பாலத்தில் (Signature Bridge) நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, காரின் டிரங்குக்குள் ஒருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.  இந்தச் சம்பவம் பரபரப்புடன் கூடிய நகைச்சுவையை ஏற்படுத்தி, தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.

போலீசார் சோதனையின் போது காரை நிறுத்தி, ஒருவராகக் குடும்ப உறுப்பினர்கள் வெளியே வரச் சொல்லி, காரின் பின்புற டிரங்கைத் திறக்கச் சொல்லியுள்ளனர்.

டிரங்கைத் திறந்ததும், ஒருவர் காதுகளில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு உள்ளே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், “மாமா பையனான” அந்த நபர் காரில் இடம் இல்லாததால் டிரங்குக்குள் படுத்து வந்ததாகக் குடும்பத்தினர் விளக்கமளித்தனர். இந்த விசித்திரமான காட்சியைப் பார்த்த போலீசார் மற்றும் அங்கிருந்த பயணிகள் சிரித்துவிட்டனர்.