வங்கதேசத்தின் ஷேர் பங்களா மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசப் புலிகள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பதிவு செய்யும் முதல் டெஸ்ட் வெற்றி இது என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
268 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியை, தனது அனல் பறக்கும் வேகப்பந்து வீச்சால் நிலைகுலையச் செய்த நஹீத் ராணா, 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
HISTORY – BANGLADESH DEFEATED PAKISTAN FOR THE FIRST TIME IN TESTS AT HOME 🥶🔥
Nahid Rana is the Hero for Tigers. pic.twitter.com/0LQ5wp1B42
— Johns. (@CricCrazyJohns) May 12, 2026
“>
குறிப்பாக தேநீர் இடைவேளைக்குப் பிறகு வெறும் 18 பந்துகளில் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்தார். இந்தத் தோல்வியின் மூலம், வங்கதேசத்திடம் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் தோற்ற ஜிம்பாப்வேயின் மோசமான சாதனையை பாகிஸ்தான் சமன் செய்துள்ளது.
