இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கிளாமராகத் தனது உடலமைப்பைக் காட்டி வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் ‘முஸ்கான் கரியா’ என்ற இன்ஃப்ளுயன்சருக்கு, ‘இலங்கையின் சிறந்த கன்டென்ட் கிரியேட்டர் 2026’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த அவார்ட் ஷோ வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய தார்மீக விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எக்ஸ்க்ளூசிவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 5,000 சந்தாதாரர்களைக் கொண்டு, ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 390 ரூபாய் வீதம், மாதத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை இவர் வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில், இவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் வேளையில், தற்போதைய சமூக வலைத்தள கலாச்சாரம் மற்றும் கன்டென்ட் கிரியேஷனின் தரம் குறித்துப் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

“உடலைக் காட்சிப்படுத்துவதற்கும், கிளாமர் காட்டுவதற்கும் விருதுகள் வழங்கும் நிலைக்குத் தான் இன்றைய ‘கன்டென்ட் கிரியேஷன்’ தரம் தாழ்ந்து போய்விட்டதா?” என்றும், உண்மையான உழைப்பையும், அசாத்தியமான திறமைகளையும் வெளிப்படுத்தித் தரமான கன்டென்ட்களை உருவாக்கும் எத்தனையோ திறமையாளர்கள் இங்கு அங்கீகாரமே இல்லாமல் முடங்கிக் கிடப்பதாக நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“>

 

உண்மையான கலைக்கும் திறமைக்கும் மதிப்பளிக்காமல், வெறும் வியூஸ்களையும் பணத்தையும் மட்டுமே குறிவைத்து விருதுகள் வழங்கப்படுவதாக இந்த வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன.