ஐரோப்பிய நாடு ஒன்றில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி, இந்தியர்களிடையே ஒரு மிகப்பெரிய சுயபரிசோதனை விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் கோகோ கோலா குடித்துவிட்டு, அதன் காலி டின்னைச் அசால்ட்டாகச் சாலையிலேயே தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த சக மக்கள் அனைவரும், ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்தவனைப் போல அவரை ஒருவிதமான அதிர்ச்சியோடும் கேவலமாகவும் அருவருப்போடும் பார்க்கின்றனர்.
தன் நாட்டை, தான் வாழும் சூழலைச் சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்பதை உணர்த்தும் வகையிலும், “இது போன்ற பொது ஒழுக்கம் நம் இந்தியாவிலும் என்றைக்கு வரப்போகிறது?” என்ற ஆதங்கக் கேப்ஷனுடனும் இந்த வீடியோ தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பிற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவதை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தங்களது க
View this post on Instagram
“>ருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
“உலகில் உள்ள மற்ற நாடுகளை விடவும் மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், சதுப்பு நிலங்கள் என அத்தனையையும் ஒரே இடத்தில் கொண்ட மிகச் செழிப்பான இயற்கை வளங்கள் இந்தியாவில்தான் உள்ளன; உழைப்பிலும், இளைஞர்களின் அதீத திறமைகளிலும் இந்தியா உலகிலேயே சிறந்து விளங்குகிறது” என்பதை ஒப்புக்கொள்ளும் நெட்டிசன்கள், அதே வேளையில், நாம் இந்த இயற்கை வளங்களைச் சரியாகப் பாதுகாப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
குப்பைகளை அள்ளி வீசுவது, பொது இடங்களை அசுத்தப்படுத்துவது போன்ற விஷயங்களில் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம் என்றும், இந்த ஒரு பலவீனத்தை வைத்தே உலக நாடுகள் நம்மை இன்னும் குறைத்து மதிப்பிடுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த வீடியோவை வெறும் விமர்சனமாகப் பார்க்காமல், ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு இந்தியரும் தங்களை மாற்றிக்கொண்டால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
