மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் சூர்யா, விக்ரம் மற்றும் முன்னாள் நடிகர் விஜய் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ள இவர், கடந்த 2024 டிசம்பரில் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் படங்களில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பதை முற்றிலும் குறைத்துக் கொண்டுள்ள கீர்த்திசுரேஷ் நடிப்பில், தற்போது தமிழில் “சத்யவான் சாவித்ரி” திரைப்படம் வெளியாகக் காத்திருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம், அங்கிருந்த விஜய்யின் ரசிகர்கள் “தளபதி பற்றி ஏதாவது சொல்லுங்க?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குச் சட்டெனப் பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “அவர் இனி தளபதி இல்ல… இப்போது அவர் முதலமைச்சர்” என கலகலப்பாகக் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

“>

ஏற்கனவே விஜய்யுடன் ‘பைரவா’ மற்றும் ‘சர்க்கார்’ ஆகிய இரண்டுபிளாக்பஸ்டர் படங்களில் ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது அரசியல் கட்சி தொடங்கி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்து மேடையில் இப்படிப் பேசியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.