
தெலுங்கானாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. PJTSAU க்கு சொந்தமான நிலத்தை புதிய உயர்நீதிமன்ற வளாகத்தை கட்டுவதற்கு ஒதுக்குவதற்கான மாநில அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராடிவரும் நிலையில் இந்த கொடூர சம்பவம் ராஜேந்திர நகரில் உள்ள பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று உள்ளது.
அதில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய நிலையில் அப்போது ஒரு மாணவி தப்ப முயன்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் மாணவியை இரு சக்கர வாகனத்தில் மகளிர் காவலர்கள் துரத்திச் சென்றனர். அப்போது தடுமாறி கீழே விழுந்த மாணவியின் முடியை பிடித்து தர தர வென இழுத்துச் சென்றுள்ளனர். தற்போது நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.
The recent incident involving Telangana police is deeply concerning and absolutely unacceptable. Dragging a peaceful student protester and unleashing abrasive behaviour on the protestor raises serious questions about the need for such aggressive tactics by the police.
This… pic.twitter.com/p3DH812ZBS
— Kavitha Kalvakuntla (@RaoKavitha) January 24, 2024