இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வரும் நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கியின் கணக்குகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக புகார்களை வங்கிகளிடம் தெரிவித்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் இருக்கும் புகார்களை தெரிவித்த பிறகும் வங்கி சார்ந்த அந்தப் பிரச்சனைக்கான தீர்வு காணப்படவில்லை என்றால் இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அளிக்கலாம்.
ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் கூட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் வங்கி தொடர்பான உங்களுடைய புகார்களை எடுத்து பூர்வமாக வங்கிக்கு அனுப்பலாம். அதன் பிறகு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கி உருவாக்கிய cms.rbi.org.in என்ற இணையதளத்தை அணுகலாம். இதில் வாடிக்கையாளர்கள் புகார்களை பதிவு செய்யலாம். அதன் பிறகு உங்களுக்கு ஒரு புகார் எண் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய புகார் தொடர்பான நிலையை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
