2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் தொடர்ச்சியாக ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து சாதனை படைக்க காத்திருக்கின்றார். மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, சிதம்பரம் மற்றும் யஸ்வந்த் சின்ஹா ஆகியவர்களின் சாதனைகளும் முறியடிக்கப்பட உள்ளது.

1959 முதல் 1964 வரை நிதியமைச்சர் ஆக இருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆன மொரார்ஜி தேசாய், தொடர்ச்சியாக ஐந்து முழு பட்ஜெட்டுகளை ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமைக்குரியவர். அதனுடன் தற்போது நிர்மலா பெயரும் இணைய உள்ளது. 2019 ஆம் ஆண்டு மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த போது 49 ஆண்டுகளில் ஒரு பெண் இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது அதுதான் முதல் முறையாகும்.