தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, http://B.Tech, படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 8ம் தேதி வரை இணையவழியிலும், அதன் பின்னா் பட்டியலினம், அருந்ததியா் பிரிவில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மேலும், பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று  மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.