வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடும் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை நீரில் கரைப்பது மக்களுடைய வழக்கம். இது குறித்து சில நெறிகாட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குடிநீர் ஆதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் சில விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது.

விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தான் பொதுமக்கள் கரைத்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மதுரையில் பொதுமக்கள் வைகை கீழத்தோப்பு, ஒத்தக்கடை குளம், மேலகால் குண்டாறு, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருமங்கலம், சிவன் கோயில், தெப்பம் போன்ற இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.