ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும் மலையாள இயக்குனருமான சங்கீத் சிவன் (61) உடல் நலக்குறைவால் காலமானார். மலையாள மற்றும் இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான யோதா என்ற மலையாள படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சங்கீத் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.