அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்காகச் செய்த நெகிழ்ச்சியான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழாவில் சிறுவர்கள் புலிவேடமிட்டு ‘புலியாட்டம்’ ஆடிக்கொண்டிருந்த போது, மேடைக்குக் கீழே நின்றிருந்த ஆசிரியை அவர்களுக்கு ஒவ்வொரு அசைவையும் சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
மாணவர்கள் நடனத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக, இளஞ்சிவப்பு நிறப் புடவை அணிந்திருந்த அந்த ஆசிரியை, தானும் ஒரு புலியைப் போல தரையில் ஊர்ந்து ஆடிக்காட்டியது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ஆசிரியையின் அர்ப்பணிப்பைப் பாராட்டி வருகின்றனர். “ஆசிரியர்களின் உழைப்பு விலைமதிப்பற்றது” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஒரு மாணவனின் வெற்றிக்கு பின்னால் ஆசிரியரின் எவ்வளவு பெரிய உழைப்பு இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
தனது தோற்றத்தைப் பற்றியோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியோ கவலைப்படாமல், மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட அந்த ஆசிரியையை நெட்டிசன்கள் “நிஜமான ஹீரோ” என்று கொண்டாடி வருகின்றனர்.
